பள்ளிக்கூட பஸ் மீது கார் மோதியதில் அரசு பள்ளி ஆசிரியை, தந்தையுடன் பலி


பள்ளிக்கூட பஸ் மீது கார் மோதியதில் அரசு பள்ளி ஆசிரியை, தந்தையுடன் பலி
x

தனியார் பள்ளிக்கூட பஸ் மீது கார் மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியையும், அவருடைய தந்தையும் பலியானார்கள்.

சேலம்,

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி எம்.டி.எஸ். நகரை சேர்ந்தவர் கேப்ரியல். இவர் கொண்டப்பநாயக்கன்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி எமரால்டு (வயது 40), அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை.

இவர் தனது கணவர் கேப்ரியல், தந்தை ஜெபராஜ் (74), மகன்கள் ஜெசிந்த் (19), பெரில் (14) ஆகியோருடன் நேற்று சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சென்றனர். அந்த காரை ஜெசிந்த் ஓட்டிச் சென்றார். அவர்கள் சென்ற கார் நேற்று காலை 7.30 மணி அளவில் தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணத்தை அடுத்த எர்ரஅள்ளி அருகே சென்று கொண்டிருந்தது.

2 பேர் பலி

அப்போது பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி பஸ்சின் பின்புறம் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த ஆசிரியை எமரால்டு, அவரது தந்தை ஜெபராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். எமரால்டின் மகன்கள் ஜெசிந்த், பெரில் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். கேப்ரியல் லேசான காயம் அடைந்தார்.


Next Story