கோவில்பட்டியில் மெயின் ரோட்டில் திடீரென பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ்


கோவில்பட்டியில் மெயின் ரோட்டில் திடீரென பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ்
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மெயின் ரோட்டில் திடீரென பழுதாகி நின்ற அரசு டவுன் பஸ்சால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மெயின் ரோட்டில் நேற்று காலை அரசு டவுன் பஸ் திடீரென பழுதாகி நின்றது. இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழுதாகி நின்ற டவுன் பஸ்

கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் காலை 8 மணி முதல் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் 2 சக்கரம், 4 சக்கர வாகனங்கள், ஆட்டோ, லாரி, பஸ்கள், தனியார் பள்ளி- கல்லூரி பஸ்கள், மினி பஸ்கள் அதிகம் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.

இந்தநிலையில் நேற்று காலையில் எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த அரசு டவுன் பஸ் மாதாங்கோவில் சந்திப்பில் திடீரென பழுதடைந்து நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதனை அறிந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு ரமேஷ், அந்த வழியாக வந்த வாகனங்களை மாதாங்கோவில் ரோடு வழியாக திருப்பி விட்டார். பழுதடைந்த அரசு டவுன் பஸ்சை மீட்டு செல்வதற்கு ராட்சச கிரேன் கொண்டு வரப்பட்டது.

பின்னர் பஸ்சை கிரேன் மூலம் மெயின் ரோடு, லட்சுமி மில் ெரயில்வே மேம்பாலம், இனாம் மணியாச்சி அணுகு சாலை வழியாக அரசு போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும், நெருக்கடியும் ஏற்பட்டது.


Related Tags :
Next Story