பட்டதாரி வாலிபர் தற்கொலை
பட்டதாரி வாலிபர் தற்கொலை கொண்டார்.
விராலிமலை நேதாஜி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 26). பட்டதாரி. இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தினேஷ்குமார் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று தினேஷ்குமார் தனது குடும்பத்தினரிடம் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி தனது மகனை தேடி இலுப்பூர் சாலையில் உள்ள கொடிக்கால்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். சாலை ஓரத்தில் தனது மகனின் செருப்பு கிடந்ததை கண்ட அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள விவசாய கிணற்றில் தினேஷ்குமார் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்து தினேஷ்குமாரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் விராலிமலை போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.