கோவில்பட்டியில்பட்டதாரி பெண் தற்கொலை
கோவில்பட்டியில்பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வள்ளுவர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மகள் துர்காதேவி (வயது 24). பட்டதாரியான இவர், தனது உறவினர் நடத்தி வரும் அழகுநிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அழகுநிலையத்தை நடத்தி வரும் பெண்ணும், அவரது கணவரும் சில நாட்களுக்கு முன்பு துர்காதேவியை கண்டித்தார்களாம். இதனால் மனமுடைந்த துர்காதேவி, வீட்டில் வைத்து எலிமருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதையறிந்த அவரது பெற்றோர், அவரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்தவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.