திருப்பூர் அருகே ஆட்டுப்பட்டி போட்டு பட்டதாரி பெண் ஒருவர் அதிகம் சம்பாதித்து வருகிறார்.
திருப்பூர் அருகே ஆட்டுப்பட்டி போட்டு பட்டதாரி பெண் ஒருவர் அதிகம் சம்பாதித்து வருகிறார்.
அருள்புரம்
திருப்பூர் அருகே ஆட்டுப்பட்டி போட்டு பட்டதாரி பெண் ஒருவர் அதிகம் சம்பாதித்து வருகிறார்.
முழு நேர விவசாய பணி
படித்து பட்டதாரியாகி சம்பாதிப்பதை காட்டிலும் பட்டி போட்டு ஆடு மேய்ப்பாதல் கூடுதல் லாபம் கிடைக்கிறது என்கிறார். பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சி அக்கணம்பாளையத்தை சேர்ந்த பெண் விவசாயியான ஆனந்தி (வயது37) கூறியதாவது:-
பி.எஸ்.சி. கணிதம் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்துள்ளேன். தனியார் பள்ளி ஒன்றில் ஓராண்டுக்கு மேல் ஆசிரியராக பணியாற்றி உள்ளேன்.தந்தை மூலம் விவசாய தொழிலின் அனுபவத்தை கற்று கொண்டேன். நான், தற்போது முழு நேர விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
20 ஆடுகள்
கணவர் சிவகுமார் சில வருடங்களுக்கு முன் காலமானார். அரசு பணிக்கு முயற்சித்து கிடைக்கவில்லை. தனியார் பள்ளியிலும் போதிய சம்பளம் இல்லை. எனவே வேலைக்கு செல்ல வேண்டாம் என நினைத்து விவசாயத்திற்கு வந்தேன்.மனம் தளராமல் என் அப்பாவிடம் கற்றுக்கொண்ட விவசாயத் தொழிலை முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் தோட்டத்தில் வளர்ப்பதற்காக 20 ஆடுகள் வாங்கினேன். பின்னர் ஆடு வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தினேன்.
ஆடுகள் பெருகியதால் விலைக்குக் கேட்டு பலரும் வந்தனர். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கொட்டகை அமைத்து ஆடு விற்பனை செய்ய தொடங்கினேன். ஆடு நன்றாக இருந்தால் 3 குட்டிகள் வரை ஈனும். 3 முதல் 4 மாதங்களுக்குள் நல்ல எடை கிடைத்துவிடும். ஆடுகளுக்கு உணவுக்கு தேவையான பயிர்களை தோட்டத்திலேயே பயிரிடுகிறோன்.
தக்காளி, வெங்காயம்
ஆடு ஒரு கிலோ ரூ.450 முதல் ரூ.600 வரை விற்பனை ஆகிறது. விவசாயம் உள்பட ஆடுகள் பராமரிப்பு பணிகளையும் நானே கவனித்துக்கொள்கிறேன். சமூக வலைதளங்களில் கிடைக்கும் தொடர்புகள் மூலம் ஆடு வளர்ப்பு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.
தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவற்றால் விவசாயத்தில் இழப்பு ஏற்பட்ட போதும், பெரிய அளவு நஷ்டம் இல்லை. ஆடு வளர்ப்பதால் கிடைக்கும் லாபத்தால் கூடுதல் வருவாய் ஈட்ட முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
---------