அரசு பள்ளியில் முப்பெரும் விழா


அரசு பள்ளியில் முப்பெரும் விழா
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே அரசு பள்ளியில் முப்பெரும் விழா

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த ராஜன் கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கு பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டி கவுரவிப்பது, பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் 6 மாணவர்கள் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்ததற்கு பரிசு வழங்கி பாராட்டுவது மற்றும் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டுதல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பவுன் சுப்பிரமணியன், பொருளாளர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அகோரமூர்த்தி வரவேற்றார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story