போலீசார் நடத்திய குறைதீர்க்கும் முகாம்


போலீசார் நடத்திய குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 22 April 2023 1:00 AM IST (Updated: 22 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர்- மேட்டூரில் போலீசார் நடத்திய குறைதீர்க்கும் முகாமில் 61 மனுக்களில் 53 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

குறைதீர்க்கும் முகாம்

ஆத்தூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆத்தூர் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமை தாங்கினார். ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனூர், மல்லிகைகரை, தம்மம்பட்டி, டவுன் மற்றும் ரூரல் மகளிர் போலீஸ் நிலையம் சம்பந்தமான 46 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

இதில் 41 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். முகாமில் ஆத்தூர் உட்கோட்ட பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேட்டூர்

மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் தலைமையில் பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதற்கான குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டு 12 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2 ஊர்களில் நடந்த முகாம்களில் பெறப்பட்ட மொத்த மனுக்களில் 61-ல் 53 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story