சைக்கிளில் சென்ற ஓட்டல் ஊழியரை தள்ளிவிட்டு செல்போன் பறிப்பு


சைக்கிளில் சென்ற ஓட்டல் ஊழியரை தள்ளிவிட்டு செல்போன் பறிப்பு
x

ஞ்சையில் சைக்கிளில் சென்ற ஓட்டல் ஊழியரை தள்ளிவிட்டுவிட்டு செல்போனை பறித்துச்சென்ற 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் சைக்கிளில் சென்ற ஓட்டல் ஊழியரை தள்ளிவிட்டுவிட்டு செல்போனை பறித்துச்சென்ற 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

செல்போன் பறிப்பு

தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலைபார்த்து வருபவர் சண்முகராஜன் (வயது 46). இவர் நேற்று இரவு தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் யாகப்பா நகர் அருகே சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 நபர்கள் வந்தனர்.

திடீரென அவர்கள், சைக்கிளில் சென்ற சண்முகராஜனை தள்ளி விட்டு, விட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர்.

இதனைப்பார்த்த சண்முகராஜன் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் திருடர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

2 சிறுவா்கள் கைது

இந்த நிலையில் செல்போனை பறித்துச்சென்ற 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள மங்களபுரத்தில் சென்ற போது ஒருவரிடம் செல்போனை பறிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து நையபுடைத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை செய்த போது, சண்முகராஜனிடம் பறித்துச்சென்ற செல்போன் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் செல்போனையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்திய போது அவர்கள், தஞ்சை அண்ணாநகர் 2-ம் தெருவை சேர்ந்த் 18 வயது சிறுவன், தஞ்சை அன்புநகர் 1-ம் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story