மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்
மனைவியை கொலை செய்ய கணவர் முயன்றுள்ளார்.
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே தோப்புக்கொல்லையை சேர்ந்தவர் வீரமுத்து மனைவி கவிதா (வயது 34). இவர்களுக்கு வீரதரன், தயாளன் என்ற இரு மகன்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் வீரமுத்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் வீரமுத்து, கவிதாவின் மீது மண்எண்ணெய் ஊற்றி கொலை செய்ய முன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து வீரமுத்துவும், இவர் பேசி வந்த பெண்ணும் சேர்ந்து கவிதாவை தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
இதுகுறித்து கவிதா ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா தனது மகன்களுடன் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் கவிதா மற்றும் அவரது இரு மகன்களையும் அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளிக்கு செல்லாமல் இருந்த கவிதாவின் மகன்கள் 2 பேரையும் போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.