குட்டை ஏரியை சேதப்படுத்தி தனியார் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி பொதுமக்கள் புகார்


குட்டை ஏரியை சேதப்படுத்தி தனியார் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி பொதுமக்கள் புகார்
x

குட்டை ஏரியை சேதப்படுத்தி தனியார் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி பொதுமக்கள் புகார்

திருப்பூர்

ஊத்துக்குளி

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கஸ்தூரிபாளையம், செங்காளிபாளையம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள மேன்றக்கரை குட்டை ஏரியை தனியார் சேதப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்வதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.புகாரின் 2 ஊராட்சிக்கு உட்பட்ட பழனிகவுண்டம்பாளையம், செஞ்சேரியம்பாளையம், மேன்றக்கரை, அண்ணா நகர், அருவங்காட்டுபாளையம், சாமியார் பாளையம், சாம்ராஜ்பாளையம், செங்காளி பாளையம் கிராமங்களில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.இவர்கள் பெரும்பாலும் இப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர்.மழைக்காலங்களில் குட்டை நிரம்பி வழிந்தால் விவசாயத்திற்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இப்பகுதியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் குட்டையாகவும் இது உள்ளது.மேலும் இக்குட்டையை அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இணைத்துள்ளனர்.இக்குட்டை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேலானை குட்டை தூர்வாருதல் மற்றும் லைனிங் சுவர் கட்டுதல் திட்டத்தின் கீழ் ஒரு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஏரி அமைக்கப்பட்டது.இக்குட்டையின் வடக்கு பகுதி ஏரியை தனியார் சிலர் சேதப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்வதாக தாசில்தார் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மேலும் இக்கரையை ஒட்டியுள்ள தனியார் இடத்தினர் கரையின் 10 அடி உயரம் உள்ள ஏரியை சேதப்படுத்தி லாரி மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் மண் அள்ளுவதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி நேற்று அப்பகுதியில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுரேஷ்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி லட்சுமி, ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் கவிதா, மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



Next Story