நத்தத்தில் குழிக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை
நத்தத்தில் குழிக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்கப்பட்டது.
திண்டுக்கல்
நத்தம் எம்.ஜி.ஆர்.நகரில் ஒருவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு செப்டிக் டேங்க் அமைப்பதற்காக சுமார் 10 அடி ஆழ குழி தோண்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று அந்த வழியாக சென்ற ஜல்லிக்கட்டு காளை ஒன்று, செப்டிக் டேங்க் குழிக்குள் தவறி விழுந்தது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், குழிக்குள் விழுந்து தவித்த ஜல்லிக்கட்டு காளையை கயிறு கட்டி மீட்டனர். விசாரணையில் அந்த ஜல்லிக்கட்டு காளை, நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த கோவில் காளை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த காளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story