ஜப்பான் நாட்டு குழுவினர் ஆய்வு


ஜப்பான் நாட்டு குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஜப்பான் நாட்டு குழுவினர் ஆய்வு

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் முதல் கூடலூர் கக்கநல்லா வரையிலான மலைப்பாதையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மலைப்பாதையில் இந்திய-ஜப்பான் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஜப்பான் நாட்டின் நெக்ஸ்கோ நிறுவன பொது மேலாளர் மையாகே மாஷாரு, ஓ.சி. குளோபல் நிறுவன பேரிடர் மேலாண்மை நிபுணர் நிஷிஜிமி டாகாஷி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து, புகைப்படம் எடுத்து கொண்டனர். மலைப்பாதையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்க பணிகள் மற்றும் பேரிடர் பாதிப்பு உள்ள பகுதிகள் குறித்து கோபி கோட்ட பொறியாளர் செல்வம் விளக்கம் அளித்தார்.

இந்த விவரங்கள் திட்ட அறிக்கையாக தயார் செய்து, ஜப்பான் அரசிடம் வழங்கப்பட உள்ளது என்றும், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தொழில்நுட்பங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சிறப்பான திட்டங்களை இரு நாடுகளும் செயல்படுத்தும் என்றும் ஜப்பான் நாட்டு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


Next Story