அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக்குழுவினர் தர்ணா


அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக்குழுவினர் தர்ணா
x

கரூரில் 22 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக்குழுவினர் தர்ணா அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக்குழுவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கரூர்

தர்ணா போராட்டம்

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். இணை அமைப்பாளர் ஞானசேகரன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

22 அம்ச கோரிக்கை

தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த 1.1.2022 முதல் வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்கிட வேண்டும். 1.4.2022 முதல் மறு உத்தரவு வரும் வரை முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு (சரண்டர்) பணப்பலன்களை வழங்கிட வேண்டும். சி.பி.எஸ்-ஐ ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்திட வேண்டும்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் சுப்பிரமணியனின் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்து, ஓய்வூதிய பலன்களை வழங்கிட வேண்டும். 1.4.2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு பணிக்கொடை வழங்கிட வேண்டும் என்பன உள்பட 22 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த தர்ணா போராட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story