லுங்கியில் கருங்கல் கட்டிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி
ஒடுகத்தூர் அருகே லுங்கியில் கருங்கல் கட்டப்பட்ட நிலையில் தொழிலாளி, கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடதே்தி வருகின்றனர்.
ஒடுகத்தூர் அருகே லுங்கியில் கருங்கல் கட்டப்பட்ட நிலையில் தொழிலாளி, கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடதே்தி வருகின்றனர்.
கிணற்றில் பிணம்
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவருக்கு திருமணமாகவில்லை. கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சேகர் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடினர்.
இந்த நிலையில் ஊருக்கு ஒதுக்கப்புறமாக உள்ள அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் வழியாக அந்தப் பகுதி மக்கள் நேற்று காலை சென்றபோது சேகர் கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பட்டு சீனிவாசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று முட்புதர் மண்டி கிடக்கும் கிணற்றில் இறங்கி சேகர் உடலை மீட்டனர்.
கொலையா?
அப்போது சேகர் கட்டியிருந்த லுங்கியில் சுமார் 25 கிலோ எடை கொண்ட கருங்கல் கட்டப்பட்டிருந்தது. இதனால் கருங்கல்லை கட்டி அவரை யாரும் கிணற்றில் தள்ளினார்களா? அல்லது அவரை கல்லைக்கண்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை.
இதுகுறித்து உறவினர் கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சேகர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.