மதுகுடிக்க மனைவி பணம் தராததால் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி


மதுகுடிக்க மனைவி பணம் தராததால் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி
x

மதுகுடிக்க மனைவி பணம் தராததால் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம்

சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பழனிசாமி தனது மனைவியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த பழனிசாமி மொபட்டில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்தார்.

பின்னர் அவர் திடீரென அந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். இதை கேட்டு அங்கு வந்த உறவினர்கள் பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story