ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியின் கதி என்ன? என்ன ஆனது என்று தெரியவில்லை
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள உஞ்சியவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 34). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ஊரணிபுரத்திலிருந்து உஞ்சியவிடுதிக்கு செல்லும் வழியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் குளிப்பதற்கு இறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராவிதமாக அவர் ஆற்றுக்குள் தவறி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட செல்லத்துரையை அப்பகுதி மக்கள் உதவியுடன் நீண்டநேரம் தேடினர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரது கதி என்ன என்று தெரியவில்லை. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட செல்லத்துரைக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
Related Tags :
Next Story