புளியஞ்சோலை அருவியில் குதித்த தொழிலாளி பாறையில் அடிபட்டு சாவு


புளியஞ்சோலை அருவியில் குதித்த தொழிலாளி பாறையில் அடிபட்டு சாவு
x

புளியஞ்சோலை அருவியில் குதித்த தொழிலாளி பாறையில் அடிபட்டு இறந்ததார்.

திருச்சி

உப்பிலியபுரம், ஆக.25-

புளியஞ்சோலை அருவியில் குதித்த தொழிலாளி பாறையில் அடிபட்டு இறந்தார். மற்றொரு சம்பவத்தில் புள்ளம்பாடி வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலியானார்.

நண்பர்களுடன் சென்ற வாலிபர்

தா.பேட்டையை அடுத்த ஆராய்ச்சி ஊராட்சி சக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி-ஜோதி தம்பதியின் மகன் முத்து என்ற மோகன்ராஜ் (வயது 24) பட்டதாரி வாலிபரான இவர் துறையூரில் உள்ள ஒரு பேக்கரில் கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று மாலையில் இவர் சக தொழிலாளர்களுடன் புளியஞ்சோலை அருவிக்கு சென்றுள்ளார். புளியஞ்சோலை நாட்டாமடு பகுதியில் உள்ள அருவியில் மோகன்ராஜ் சக தொழிலாளர்களுடன் குளித்தார். சமீபத்தில் பெய்த மழையால் அருவியில் தண்ணீர் அதிக அளவில் வந்தது.

பாறையில் அடிபட்டு

இந்த நிலையில் அபாயம் என்று வாசகம் எழுதப்பட்ட பாறை மேல் ஏறி, மோகன்ராஜ் குதித்ததாக தெரிகிறது.

அதன் பின் அவர் மேலே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக தொழிலாளர்கள் அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அங்கு இருந்த வனத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் தேடியபோது, அருவியில் நீரோட்டம் அதிக இருந்த பகுதியில் மோகன்ராஜ் பிணமாக கிடந்தார். மோகன்ராஜ் அருவியில் குதித்தபோது, தண்ணீரின் அடியிலிருந்த பாறையில் தலைமோதியதில் படுகாயம் அடைந்து இறந்தது தெரிய வந்தது.

புள்ளம்பாடி வாய்க்கால்

இதேபோல் புள்ளம்பாடி அருகே உள்ள கோவண்டாகுறிச்சி வடுகர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (28). இவர் நேற்று மதியம் அங்குள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் குளிக்க சென்றார்.

இந்தநிலையில் அவர் குளித்துக்கொண்டு இருக்கும்போது, ஜான்பிரிட்டோவுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் வாய்க்காலில் மூழ்கினார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

பிணமாக மீட்பு

இது குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் ஜான்பிரிட்ேடா பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story