சரக்கு லாரி மீது தூங்கிய தொழிலாளி, மின்சாரம் தாக்கி சாவு
சரக்கு லாரி மீது தூங்கிய தொழிலாளி, மின்சாரம் தாக்கி சாவு
கும்பகோணத்தில் சரக்கு லாரி மீது தூங்கிய தொழிலாளி மின்மாற்றி வயரை பிடித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
கும்பகோணம் தாலுகா அண்ணல் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர்
மணிகண்டன் (வயது40). கூலி தொழிலாளி. இவர் கடந்த 23-ந்தேதி இரவு சாரங்கபாணி வீதியில் மின்மாற்றி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது படுத்து தூங்கினார். தூக்கத்திலிருந்து திடீரென எழுந்த மணிகண்டன் நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த மின்மாற்றியின் வயரை கீழ விழாமல் இருக்க இழுத்து பிடித்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் சுருண்டு விழுந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிகண்டன் மனைவி துர்கா கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.