பருப்பு உலர வைக்கும் கலனில்விழுந்து வடமாநில தொழிலாளி சாவு


பருப்பு உலர வைக்கும் கலனில்விழுந்து வடமாநில தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 18 April 2023 5:39 PM IST (Updated: 19 April 2023 3:09 PM IST)
t-max-icont-min-icon

பருப்பு உலர வைக்கும் கலனில் விழுந்து வடமாநில தொழிலாளி சாவு

திருப்பூர்

காங்கயம்

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பப்லு பிரமானிக் (வயது21). இவர் காங்கயம் அருகே சாத்திரவலசு பகுதியில் உள்ள தனியார் எண்ணெய் ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பருப்பு உலர வைக்கும் கலனில் பப்லு பிரமானிக்கின் சட்டை சிக்கியதில் அதற்குள் தவறி விழுந்து காயமடைந்தார்.

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் பப்லு பிரமானிக் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-------------


Next Story