தூக்க மாத்திரைகளை தின்று பெண் தற்கொலை முயற்சி


தூக்க மாத்திரைகளை தின்று பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 30 Aug 2023 2:30 AM IST (Updated: 30 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டியில் 2 பேர் மிரட்டல் விடுத்ததால் தூக்க மாத்திரைகளை தின்று பெண் தற்கொலை முயன்றார்.

தேனி

தேவதானப்பட்டி நாடார் தெருவை செய்தவர் கார்த்திக்ராஜா. இவரது மனைவி சித்ரா (வயது 33). கார்த்திக்ராஜா அப்பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அஷ்ரப் அலி (23), ஆஷிக் அலி (22) ஆகிய 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சித்ரா தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஷ்ரப் அலி, ஆஷிக் அலி ஆகியோர் சித்ராவை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டில் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சித்ராவை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கார்த்திக்ராஜா தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிஓடிய அஷ்ரப் அலி, ஆஷிக் அலியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story