குளச்சல் மீனவர்கள் வலையில் ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின
குளச்சல் மீனவர்கள் வலையில் ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின. ஆனால் போதிய விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலையடைந்தனர்.
குளச்சல்:
குளச்சல் மீனவர்கள் வலையில் ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின. ஆனால் போதிய விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலையடைந்தனர்.
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகளும், ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர் படகு, கட்டுமரங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். விசைப்படகுகளுக்கு கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் 60 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இந்த தடைக்காலம் வருகிற 31-ந் தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. ஆனால் வள்ளம், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன்பிடித்து வருகின்றன. அவற்றில் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. ஓரளவு மீன்களே கிடைத்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று கட்டுமரங்களில் ஏராளமான நெத்திலி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு குட்டை நெத்திலி மீன்கள் நேற்று காலை ரூ.1000 விலை போனது. பின்னர் ரூ.500-க்கு விலை சரிந்தது. மீனவர்கள் வலையில் அதிகளவு நெத்திலி மீன்கள் கிடைத்தும் போதிய விலை கிடைக்காததால் கட்டுமர மீனவர்கள் கவலையடைந்தனர்.