சாலையோரத்தில் மயங்கி கிடந்த சிறுத்தை பூனை


சாலையோரத்தில் மயங்கி கிடந்த சிறுத்தை பூனை
x

கொடைக்கானலில், சாலையோரத்தில் சிறுத்தை பூனை ஒன்று மயங்கியநிலையில் கிடந்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் வனப்பகுதியில் யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, பன்றி, அணில், சிறுத்தை பூனை உள்ளிட்ட வனவிலங்குகளும், பல்வேறு விதமான பறவைகளும் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை கொடைக்கானல் அப்பர்லேக் வியூ சுற்றுலாதல பகுதியில், சிறுத்தை பூனை குட்டி ஒன்று சாலையோரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தது. இதனைக்கண்ட சுற்றுலா பயணிகள் அதனை சிறுத்தை குட்டி என்று கருதி, அங்கு திரண்டு வந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதற்கிடையே சிறுத்தை பூனை குட்டியை அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மீட்டு பாதுகாப்பாக வைத்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் சிறுத்தை பூனை குட்டியை மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் சிறுத்தை பூனை குட்டி மயங்கி கிடந்ததற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story