குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை; நாயை கவ்வி சென்றது


குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை; நாயை கவ்வி சென்றது
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை, நாயை கவ்வி சென்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை, நாயை கவ்வி சென்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

நாயை கவ்விய சிறுத்தை

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகிறது. இந்தநிலையில் ஊட்டி பாரஸ்ட்கேட் பகுதியில் சிறுத்தை ஒன்று அதிகாலை நேரத்தில் சுற்றித்திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, மனிதர்கள் நடமாட்டம் உள்ளதா என்று நோட்டம் விட்டது. பின்னர் மெதுவாக பதுங்கி சென்று வீட்டின் முன்பு இருந்த வளர்ப்பு நாயை கவ்வி சென்றது பதிவாகி இருந்தது. நாயை வேட்டையாடும் சிறுத்தையின் சத்தம் கேட்டு, மற்ற நாய்கள் அங்கு வந்ததால் அந்த சிறுத்தை ஓட்டம் பிடித்தது.

பிடிக்க வேண்டும்

மேலும் நாயை வேட்டையாடியது சிறுத்தையா அல்லது புலியா என்று அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். ஊட்டியில் சிறுத்தை விரைவில் பிடிக்கப்படும் என்றனர்.


Next Story