இரும்பு தகடு ஏற்ற வந்த லாரி கவிழ்ந்தது
ஆரணி அருகே இரும்பு தகடு ஏற்ற வந்த லாரி கவிழ்ந்தது/
ஆரணி
ஆரணி அருகே இரும்பு தகடு ஏற்ற வந்த லாரி கவிழ்ந்தது
சென்னை காசிமேடு பகுதியிலிருந்து பயன்படுத்த முடியாத கழிவாக போடப்படும் இரும்பு தகடுகளை ஏற்றிய லாரி சேலம் உருக்காலையை நோக்கி ஆற்காடு வழியாக ஆரணியை நெருங்கிக்கொண்டிருந்தது.
இரும்பேடு அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் கார்த்தி (வயது 34) படுகாயம் அடைந்தார். மாற்று டிரைவராக வந்த தமிழரசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பொக்லைன்எந்திரம் வரவழைக்கப்பட்டு வேறு ஒரு லாரியில் இரும்பு தகடுகள் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டது. கவிழ்ந்த லாரியும் அப்புறப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
இது குறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.