நெல்லிக்குப்பத்தில் கரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
நெல்லிக்குப்பத்தில் கரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை அலையில் தற்போது கரும்பு அரவை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் வாகனங்கள் மூலம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றி வரப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை கரும்புகளை ஏற்றிக்கொண்டு சர்க்கரை ஆலைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சா்க்கரை ஆலை அருகில் சென்றபோது, அந்த லாரியை அதன் டிரைவர் சாலையோரம் நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சாலையோரத்தில் இருந்த ஒருவரின் தகர கொட்டகை சேதமடைந்தது. இருப்பினும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் பூபாலன், ராணி மற்றும் பொதுமக்கள் ஆலை நிர்வாகத்திடம் நெல்லிக்குப்பம் பகுதியில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.