நிலக்கரி ஏற்றிவந்த லாரி ஆற்றில் கவிழ்ந்தது
நன்னிலம் அருகே நிலக்கரி ஏற்றிவந்த லாரி ஆற்றில் கவிழ்ந்தது
திருவாரூர்
நன்னிலம்:
காரைக்காலில் இருந்து டால்மியாபுரத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் ஒரு லாரி சென்றது. லாரியை சேலம் மாவட்டம் கடம்பூர் பகுதியை சேர்ந்த குமார் (வயது 41) என்பவர் ஓட்டினார். கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில் நன்னிலம் அருகே தூத்துக்குடி என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் குமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story