கழிஞ்சூரில் பள்ளத்தில் சிக்கிய லாரி
கழிஞ்சூரில் பள்ளத்தில் லாரி சிக்கியது.
வேலூர்
காட்பாடி, கழிஞ்சூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே தனியார் பள்ளிக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பாதாள சாக்கடைதிட்ட பணிகளுக்கு தோண்டப்பட்டு பின்னர் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று அந்த சாலை வழியாக மணல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட இடத்தில் மண்ணில் சிக்கிக் கொண்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு லாரியில் இருந்து மணல் அகற்றப்பட்டு லாரியை மீட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தினமும் இந்த சாலையை 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலை சீரமைக்கப்படாததால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது. விரைவில் அங்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story