கால்வாயில் கவிழ்ந்த சொகுசு கார்
கால்வாயில் கவிழ்ந்த சொகுசு கார்
கன்னியாகுமரி
தென்தாமரைகுளம்:
குளச்சல் ஆனைகுழியை சேர்ந்தவர் பாபு (வயது38), கார் டிரைவர். இவர் தனது காரில் நண்பர்களான குளச்சல் ஆசாத் நகரை சேர்ந்த அபுதாகிர், குளச்சல் கோடிமுனையை சேர்ந்த நிஜின் ஆகியோருடன் நேற்று கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். அதன் பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பி செல்லும் வழியில் கோவளம் அடுத்த அகஸ்தீஸ்வரம் அருகில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story