ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் எரிகட்டி தயார் செய்வதற்கான எந்திரம்;ஆசனூர் பழங்குடியினருக்கு கலெக்டர் வழங்கினார்
ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் எரிகட்டி தயார் செய்வதற்கான எந்திரத்தை ஆசனூர் பழங்குடியினருக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.
ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் எரிகட்டி தயார் செய்வதற்கான எந்திரத்தை ஆசனூர் பழங்குடியினருக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.
எரிகட்டி
தாளவாடி மலைப்பகுதிகளில் அதிகமாக காணப்படும் உண்ணிக்குச்சிகளை கொண்டு பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பல்வேறு வழிகாட்டுதல் மூலம் வாழ்ந்து காட்டுவோம் என்ற திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி உருவாக்கப்பட்ட ஆசனூர் பழங்குடியினர் லேண்டனா தொழிற்குழு பர்னிச்சர்களை உற்பத்தி செய்து வருகிறது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் புத்தாக்க நிதியாக ரூ.16 லட்சம் பெற்று எரிகட்டி தயார் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலம் பழங்குடியினர்கள் வனப்பகுதியில் காணப்படும் உண்ணிக்குச்சி செடிகளை அகற்றி, அவற்றினை பொடிகளாக்கி அதன் மூலம் எரிகட்டி தயார் செய்வதற்கும், பாய்லர் தொழிற்சாலைகளுக்கு எரியூட்டியாகவும் தயார் செய்து விற்பனை செய்தவன் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து தங்களது வாழ்வாதாரம் மேம்படும்.
ஆசனூர் பழங்குடியினர்
தினமும் தொழில்குழு உறுப்பினர்களுக்கு ரூ.300 வரை வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் இந்த எரிகட்டியானது ஒரு டன் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆசனூர் பழங்குடியினர் லேண்டனா தொழிற்குழுவிற்கு தொடர்பு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்கள் பொருளாதார மேம்பாடும் அடைகின்றனர்.
இந்த நிலையில் வாழ்ந்து காட்டுவோம் புத்தாக்க நிதியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட டிராக்டர், டிரைலர், சிப்பர் மற்றும் அறுப்பான் எந்திரங்களை உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்கு ஏதுவாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து, ஆசனூர் பழங்குடியினர் லேண்டனா தொழிற்குழுவிற்கு வழங்கி அதன் செயல்பாட்டினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.