பிளஸ்-1 மாணவிக்கு பிறந்த ஆண் சிசு சாவு


பிளஸ்-1 மாணவிக்கு பிறந்த ஆண் சிசு சாவு
x

பிளஸ்-1 மாணவிக்கு பிறந்த ஆண் சிசு இறந்தது.

திருச்சி

பிளஸ்-1 மாணவி

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அஜித்(வயது 20). இவர் பாலக்கரையில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில், அந்த கடையின் அருகே உள்ள மற்றொரு கடைக்கு தனது தாயாருடன் பிளஸ்-1 மாணவி ஒருவர் வந்து சென்றுள்ளார்.

அப்போது, அஜித்துக்கும், அந்த மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மாணவி தனது பாட்டி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில், அவரிடம் அஜித் ஆசைவார்த்தை கூறி பாலியல் உறவு கொண்டுள்ளார்.

குறை பிரசவம்

இதனால் மாணவி கர்ப்பமானார். 6 மாத கர்ப்பிணியான மாணவி கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்தபோது, நள்ளிரவில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், தனது மகளையும், ஆண் சிசுவையும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆண் சிசு உயிரிழந்தது. மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


Related Tags :
Next Story