விஷ தழையை தின்று ஒருவர் தற்கொலை
விழுப்புரம் அருகே விஷ தழையை தின்று ஒருவர் தற்கொலை
விழுப்புரம்
செஞ்சி
விழுப்புரம் அருகே உள்ள கூடலூர் டட் நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி(வயது 53). மது குடிக்கும் பழக்கம் உடைய இவர் சம்பவத்தன்று ஒட்டன் தழை என்ற விஷ தழையை அரைத்து தின்று விட்டாராம். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்தோணிசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணிசாமி பரிதாபமாக இறந்தார். மதுபழக்கத்தால் வயிற்று வலி தாங்க முடியாமல் அதோணிசாமி விஷ தழையை அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story