மொபட்டில் கட்டி இரும்பு கம்பியை இழுத்து சென்ற நபர்
எரியோட்டில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் நேற்று மொபட்டில் இரும்பு கம்பியை கட்டி இழுத்து சென்றதால் பரபரப்பு.
திண்டுக்கல்
எரியோட்டில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் நேற்று, மொபட்டில் ஒருவர் வேகமாக சென்றார். அந்த மொபட்டின் பின்புறம் இரும்பு கம்பிகளை கட்டி வைத்திருந்தார். அது சாலையில் உரசியபடி சென்றதில் அந்த பகுதியில் புழுதி பறந்தது. இதை பார்த்த ஒருவர் தனது செல்போனில் அதனை படம் பிடித்தார். அப்போது அவர் நைசாக பேசி, எதற்காக கம்பியை கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், பூத்தாம்பட்டியில் இருந்து வேடசந்தூர் கொண்டு செல்வதாக கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
Related Tags :
Next Story