தஞ்சையில் 40 அடி ஆழகிணற்றுக்குள் விழுந்தவர் உயிருடன் மீட்பு


தஞ்சையில் 40 அடி ஆழகிணற்றுக்குள் விழுந்தவர் உயிருடன் மீட்பு
x

தஞ்சையில் 40 அடி ஆழகிணற்றுக்குள் விழுந்தவர் உயிருடன் மீட்பு

தஞ்சாவூர்

தஞ்சையில் 40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தவர் தீயணைப்பு படையினரின் துரித நடவடிக்கையால் உயிருடன் மீட்கப்பட்டார்.

கிணற்றுக்குள் விழுந்தவர்

தஞ்சை மேலவஸ்தாசாவடி திருவள்ளூவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கனகவேல் (வயது 45). இவருக்கு மனைவி, 19 மற்றும் 17 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இவர்களின் வீட்டின் பின்புறம் 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று கனகவேல் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு படை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா அறிவுறுத்தலின் பேரில் நிலைய அலுவலர் சரவணமுத்து (பொறுப்பு) தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

உயிருடன் மீட்பு

இதனையடுத்து தீயணைப்பு படையினர் கிணற்றுக்குள் விஷ வாயு உள்ளதா? என ஆய்வு செய்தனர். பின்னா் கிணற்றில் இருந்த 10 அடி ஆழ தண்ணீருக்குள் உயிருக்கு போராடி கொண்டிருந்த கனகவேலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.அதன்படி தீயணைப்பு வீரர்கள் பிரவீன்குமார், வசந்தபாலன் ஆகியோர் கயிறு மூலம் இறங்கி கனகவேலை உயிருடன் மீட்டு கிணற்றுக்கு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையை அவரது குடும்பத்தினர், அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.


Related Tags :
Next Story