அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது


அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
x

திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ்கிடிஜாலா உத்தரவின்பேரில் உதவி வனப்பாதுகாவலர் ஆர்.ராஜ்குமார், திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் எம்.பிரபு ஆகியோர் மேற்பார்வையில் ஆண்டியப்பனூர் காப்புகாட்டு பகுதியில் வனப்பணியாளர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேர்க்கானூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் (வயது 66) என்பவர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கியுடன் இருந்துள்ளார். அதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அதேபோல் கம்புகுடி பகுதியில் 2 தேக்கு மரம், 5 சிலைவாகை மரங்களை வெட்டி, துண்டுகளாக்கி நான்கு சக்கர வாகனத்தில் கடத்த முயன்ற அதேப்பகுதியைச் சேர்ந்த காளி (40) என்பவரை வனத்துறையினர் கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வனச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story