ராஜாக்கமங்கலம் அருகே குளத்தில் மிதந்த ஆண் சடலம்


ராஜாக்கமங்கலம் அருகே குளத்தில் மிதந்த ஆண் சடலம்
x

ராஜாக்கமங்கலம் அருகே குளத்தில் ஆண் சடலம் மிதந்தது.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே கல்லுகட்டியில் இருந்து அழிக்கால் செல்லும் வழியில் மனுவேல்குளம் உள்ளது. இந்த குளத்தில் நேற்று காலையில் ஒரு ஆண் சடலம் ஒன்று மிதந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர் முட்டம் பகுதியை சேர்ந்த யூஜின் என்ற ரவி (52) என்பதும், மதுபோதையில் அந்த குளத்தின் அருகே அவர் படுத்து கிடந்ததும் தெரிய வந்தது. இதனால் மதுபோதையில் நடந்து சென்ற போது குளத்திற்குள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இறந்த யூஜினுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-*


Next Story