திருமணம் நிச்சயமான பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்
திருமணம் நிச்சயமான பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
ஜோலார்பேட்டை
திருமணம் நிச்சயமான பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் தட்சிணாமூர்த்தி (வயது 24), பெங்களூரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் புதுப்பேட்டை அருகே அக்ராகரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகன் சுவேதாவுக்கும் (20) கடந்த 5 வருடங்களாக காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த வாலிபரை மாப்பிள்ளையாக தேர்வு செய்து நிச்சயதார்த்தம் நடத்தினர்.
இந்த நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் சுவேதா வீட்டை விட்டு வெளியேறி காதலன் தட்சிணாமூர்த்தியுடன் நேற்று காலை அக்ராகரம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இருவரும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கினர். அதன் பிறகு சுவேதா தனது கணவர் வீட்டிற்கு சென்றார்.