மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கொத்தனார் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கொத்தனார் பலி
x
தினத்தந்தி 21 Aug 2023 12:15 AM IST (Updated: 21 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கொத்தனார் பரிதாபமாக பலியானார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கொத்தனார் பரிதாபமாக பலியானார்.

கொத்தனார்

மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி கண்ணன் கரைவிளையை சேர்ந்தவர் அருள்ராஜ். இவருடைய மகன் ராஜகுமார் (வயது 31), கொத்தனார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்தநிலையில் ராஜகுமார் நேற்று காலை வழக்கம் போல தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பயணம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பலி

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜகுமார் சம்பவ இடத்திலேேய துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராஜகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story