குளத்தில் பிணமாக மிதந்த கொத்தனார்


குளத்தில் பிணமாக மிதந்த கொத்தனார்
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே குளத்தில் பிணமாக மிதந்த கொத்தனார்

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே நெல்வேலி மாவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் மகன் செந்தில் (வயது 35). கொத்தனாரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மது பழக்கம் உள்ள இவர் ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள பூவோட்டுகுளத்தில் செந்திலின் உடல் பிணமாக மிதந்தது. கரையில் அவரது சட்டை மற்றும் செல்போன் இருந்தது. பின்னர் அந்த உடலை பொதுமக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது அவருடைய உடலில் பேண்ட் மற்றும் ஷூ அணிந்திருந்தார்.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குளத்தில் தவறி விழுந்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story