உடன்குடியில் பென்சனர்கள் கூட்டமைப்பு கூட்டம்
உடன்குடியில் பென்சனர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
உடன்குடி:
உடன்குடியில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு உடன்குடி கிளை சார்பில் பென்சனர்கள் தின விழா நடந்தது.
அமைப்பின் உடன்குடி வட்டார தலைவர் ஐ.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் அண்ட்ரூஸ், அற்புதராஜ், பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார துணைத்தலைவர் சிவனாறுமுகம் அனைவரையும் வரவேற்றார். அமைப்பின் உறுப்பினர்கள் நட்டார், ஜான்சன், மனோகர்சாமுவேல், அசன்முகைதீன், ராமச்சந்திரன், பள்ளித் தலைமையாசிரியர் ஜெபசிங், வட்டாரக் கல்வி ஆலுவலர் ஜெயவதி ரத்தினாவதி ஆகியோர் பேசினர். ஒய்வூதியதாரர்களின் நலனில் கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிடிக்கைகள், சாதனைகள், ஓய்வுகாலத்தில் நலமுடன் நிம்மதியாக வாழும் முறை ஆகியவை குறித்து மாநில பொருளாளர் ராமசாமி, மாநில பொதுச்செயலர் இரா.தங்கராஜ் ஆகியோர் பேசினா். சங்க செயலர் பிரின்ஸ் சாம்சுந்தர்சிங் நன்றி கூறினார்.