போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நினைவு சின்னம்
அனைத்து மாவட்டங்களிலும் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நினைவு சின்னம் வைக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல்
தேசிய முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தென் மண்டல தலைவர் மகாராஜன், மாநில தலைவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் உள்ள மாறுபாடுகளை களைந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேயே அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story