சாலையில் தோண்டிய குழியில் பால் வேன் சிக்கியது


சாலையில் தோண்டிய குழியில் பால் வேன் சிக்கியது
x

முக்கண்ணாமலைப்பட்டியில் சாலையில் தோண்டிய குழியில் பால் வேன் சிக்கியது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இருந்து பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டிக்கு வந்தது. பின்னர் மீண்டும் புதுக்கோட்டைக்கு செல்ல சக்கரான்குளக்கரையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த குழியில் பால் வேன் சிக்கியது. இதில் டிரைவரின் சாமர்த்தியத்தால் அந்த வேன் மணல்மீது ஏறி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அந்த வேன் மீட்கப்பட்டது. சாலையோரத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தினர் பல மாதங்களுக்கு முன்பு தோண்டிய குழியை மூடாமல் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குழியை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story