தலையில் கல்லை போட்டு பால் வியாபாரி கொலை


தலையில் கல்லை போட்டு பால் வியாபாரி கொலை
x

ஆரணி அருகே தலையில் கல்லை போட்டு பால் வியாபாரி கொைல செய்யப்பட்டார். இதையடுத்து ஏரியில் பதுங்கி இருந்த வாலிபரை பரிசலில் சென்று போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே தலையில் கல்லை போட்டு பால் வியாபாரி கொைல செய்யப்பட்டார். இதையடுத்து ஏரியில் பதுங்கி இருந்த வாலிபரை பரிசலில் சென்று போலீசார் கைது செய்தனர்.

தலையில் கல்லை போட்டு கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விளை கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவசங்கரன் (வயது 30), சிவா (35). நேற்று இவர்கள் இருவருக்கும் இடையே மதுபோதையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதனை அந்த வழியாக வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி சேட்டு (55) என்பவர் சிவசங்கரனையும், சிவா ஆகியோரின் சண்டையை விலக்கி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவில் வளாகத்தில் வழக்கம்போல் சேட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் மீது சிவசங்கரன் ஹாலோ பிரிக்ஸ் கல்லை தலையிலும், மார்பு மீதும் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

அதிகாலையில் பால் வேலைக்கு செல்பவர்கள் கோவில் அருகில் சேட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாய் தகராறை விலக்கி விட்டதால், சிவசங்கரன் சேட்டுவை கொலை செய்தது தெரியவந்தது.

பரிசலில் சென்று பிடித்தனர்

இந்த நிலையில் சிவசங்கரன் அங்குள்ள ஏரிக்கரை அருகில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் ஏரியில் மீன் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பரிசலில் ஏறி அக்கரைக்கு சென்று சிவசங்கரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சினிமா பாணியில் சிவசங்கரனை போலீசார் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர்.

ேமலும் சேட்டுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story