விழுப்புரம் அருகே குளிர்சாதனப்பெட்டி ஏற்றிச்சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு


விழுப்புரம் அருகே குளிர்சாதனப்பெட்டி ஏற்றிச்சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே குளிர்சாதனப்பெட்டி ஏற்றிச்சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விழுப்புரம்

சென்னையில் உள்ள குளிர்சாதனப்பெட்டிகள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் இருந்து நேற்று முன்தினம் இரவு குளிர்சாதன பெட்டிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று, திருச்சியில் உள்ள ஷோரூமுக்கு புறப்பட்டது. இந்த மினி லாரி, விழுப்புரம் அருகே பிடாகம் மேம்பாலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த குளிர்சாதன பெட்டிகள் கீழே விழுந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு வாகனத்தை வரவழைத்து விபத்துக்குள்ளான மினி லாரியை சாலையோரமாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இருப்பினும் இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story