வைக்கோல் ஏற்றி சென்ற மினி லாரி தீப்பிடித்து எரிந்தது
மின்கம்பியில் உரசியதால் வைக்கோல் ஏற்றி சென்ற மினி லாரி தீப்பிடித்து எரிந்ததால் ரூ.4 லட்சம் சேதம் அடைந்தது.
பாபநாசம்:
மின்கம்பியில் உரசியதால் வைக்கோல் ஏற்றி சென்ற மினி லாரி தீப்பிடித்து எரிந்ததால் ரூ.4 லட்சம் சேதம் அடைந்தது.
மினிலாரி தீப்பிடித்தது
பாபநாசம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து 60 கட்டு வைக்கோல் வாங்கிகொண்டு மினி லாரியில் ஏற்றி கொண்டு லால்குடிக்கு புறப்பட்டு சென்றனர். உமையாள்புரம் மெயின்ரோட்டில் ெசன்ற போது திடீரென உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் வைக்கோல் தீப்பிடித்து எரிந்துள்ளது. பின்னர் மினி லாரியும் தீப்பிடித்து எரிந்தது. இதில் மினி லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது. இந்த தீவிபத்தில் லாரி டிரைவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ரூ.4லட்சம் சேதம்
இதுகுறித்து தகவல் அறிந்து பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் கட்டு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.