சாலையில் கவிழ்ந்த மினி லாரி


சாலையில் கவிழ்ந்த மினி லாரி
x

பட்டிவீரன்பட்டி அருகே அரசு பஸ் மீது மோதிய மினிலாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திண்டுக்கல்

தேனியில் இருந்து அரசு பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பரத்வாஜ் (வயது 58) என்பவர் ஓட்டினார். வத்தலக்குண்டு- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பட்டிவீரன்பட்டி அருகே சாலைப்புதூர் என்ற இடத்தில் பஸ் வந்தது. அப்போது எதிரே திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற லாரியும், பஸ்சும் நேருக்குநேர் மோதின. இதில் மினி லாரி சாலையில் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் மினி லாரி டிரைவரான பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையைச் சேர்ந்த மலைச்சாமி (38), பஸ் டிரைவர் பரத்வாஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story