பள்ளத்தில் சிக்கிய மினி லாரி


பள்ளத்தில் சிக்கிய மினி லாரி
x

மினி லாரி பள்ளத்தில் சிக்கிக் கொண்டது

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்டு, மண் மூடப்பட்டது. அதில் லேசான பள்ளம் ஏற்பட்டு இருந்தது.

நேற்று இரவு அந்த ரோட்டில் வந்த மினி லாரியின் சக்கரம் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து சக வாகன ஓட்டிகள் மினி லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story