திருவள்ளூரில் ரூ.30 லட்சம் செலவில் நவீன பஸ் நிறுத்தம்


திருவள்ளூரில் ரூ.30 லட்சம் செலவில் நவீன பஸ் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 July 2023 6:45 PM IST (Updated: 20 July 2023 6:45 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட நவீன பஸ் நிறுத்த திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அலுவலகத்தில் வரக்கூடிய அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வசதியாக திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையில் 2022- 23 ஆண்டிற்கான திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலை டோல்கேட் சந்திப்பில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நவீன பஸ் நிறுத்தம் கட்டப்பட்டது. இந்த பஸ் நிறுத்தத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள், பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள், வை-பை இன்டர்நெட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ் நிறுத்த திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.இராஜேந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


Next Story