சாலையில் திரியும் குரங்கு விபத்தில் சிக்கும் அபாயம்


சாலையில் திரியும் குரங்கு விபத்தில் சிக்கும் அபாயம்
x

சாலையில் திரியும் குரங்கு விபத்தில் சிக்கும் அபாயம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சி, வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது. இங்கு வனத்தில் இருந்து வழிதவறி வந்த குரங்கு ஒன்று, கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது. மேலும் அந்த குரங்கின் வலது கை பாதி அளவில் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த நிலையில் குரங்கை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடித்து காயப்படுத்துகின்றன. மேலும் காகங்களும் குரங்கை கொத்துகின்றன. இதற்கிடையில் அந்த குரங்கு, வால்பாறை சாலையில் அங்குமிங்கும் ஓடுவதால் வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, அங்கலகுறிச்சி பகுதியில் புகுந்த குரங்கு, சாலையில் இருபுறமும் உலா வருவதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அதை நாய்களும் துரத்துகின்றன. எனவே வனத்துறை அதிகாரிகள் அந்த குரங்கை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story