சாலையோரம் நின்ற டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதல்


சாலையோரம் நின்ற டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதல்
x

திங்கள்சந்தை அருகே சாலையோரம் நின்ற டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை அருகே சாலையோரம் நின்ற டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

திங்கள்சந்தை அருகே உள்ள இரணியல் பண்ணிக்கோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40), தொழிலாளி. இவருக்கு வனிதா(37) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கார்த்திக் சமீபத்தில் சொந்தஊர் திரும்பினார்.

சம்பவத்தன்று கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் திங்கள்சந்தைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

டெம்போ மீது மோதியது

காஞ்சிரவிளையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தியிருந்த டெம்போ மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் மீண்டும் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து கார்த்திக்கின் மனைவி வனிதா இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story