கீழே கிடந்த மோதிரத்தை போலீசில் ஒப்படைத்த நகராட்சி ஊழியர்


கீழே கிடந்த மோதிரத்தை போலீசில் ஒப்படைத்த நகராட்சி ஊழியர்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:16:40+05:30)

கீழே கிடந்த மோதிரத்தை நகராட்சி ஊழியர் போலீசில் ஒப்படைத்தார்.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் ஆஷிக் உமர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு பில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் ஆஷிக் உமர் உணவு இடைவெளியின் போது சாப்பிட சென்றார். அப்போது நகராட்சி அலுவலகத்தின் வெளியே 3 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் கீழே கிடந்தது. இதனை எடுத்த ஆஷிக் உமர் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். ஆனால் அது யாருடையது என தெரியவில்லை. பின்னர் அவர் அந்த மோதிரத்தை மானாமதுரை போலீசில் ஒப்படைத்தார். நகராட்சி ஊழியர் ஆஷிக் உமரின் நேர்மையை போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.Next Story